நூற்றுக்கணக்கான கல்கரி மக்களை ஈர்த்த ராலியா மார்ஸமன் சாரா பெய்லியின் கண்விழிப்பு அஞ்சலி
கனடா-லேசான மழையும் கல்கரி மக்களின் மனநிலையை கச்சிதமாக பிரதிபலித்த நிலை கல்கரியில் ஞாயிற்றுகிழமை ஏற்பட்டிருந்தது.
ஐந்து வயது சிறுமி மற்றும் அவளது தாய்க்கும் இறுதி மரியாதை செலுத்துவதற்காக நூற்றுக்கணக்கான மக்கள் இருண்ட மாலை நேரத்தில் கல்கரியில் கூடினர்.
கடந்த திங்கள்கிழமை கல்கரி வட மேற்கு பகுதியில் சாரா பெய்லி இறந்து கிடக்க கண்டுபிடிக்கப்பட்டார்.
இவரின் மகளை காணவில்லை என அம்பர் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால் முழுமையான தேடலின் பின்னர் கடந்த வியாழக்கிழமை ராலியாவின் உடல் கண்டுபிடிக்கப்பட்டது.
இச்சம்பவங்கள் தொடர்பாக எட்வேட் டவுனி என்பவர் கைது செய்யப்பட்டு கொலைக்குற்றம் சுமத்தப்பட்டார்.
இக்கொடிய சம்பவம் கல்கரி சமூகத்தையும் தாண்டி அதற்கப்பாலும் அனைவரையும் திடுக்கிட வைத்ததுடன் அதிர்சியையும் கொடுத்தது.
தாய்க்கும் மகளிற்கும் இறுதி மரியாதை செலுத்தவும் குடும்பத்தினருக்கு ஆதரவு வழங்கவும் அனைவரும் கலந்து கொண்டனர்.
இவர்களது மரணச்சடங்குகள் வியாழக்கிழமை நடைபெறும்.