முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கும், எனக்கும் வழித்துணையாக இருந்தவர் என சட்டசபையில் துரைமுருகனை பாராட்டி பேசினார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்.
தமிழக சட்டப்பேரவை மூன்று நாள் விடுமுறைக்குப்பின் இன்று கூடியது. இன்றில் இருந்து அடுத்த மாதம் 17-ந்தேதி வரை துறை ரீதியான மானிய கோரிக்கை விவாதம் நடைபெறுகிறது.
இன்று நீர்வளத்துறை மானிய கோரிக்கை நடைபெறுகிறது. நீர்வளத்துறை அமைச்சராக துரைமுருகன் உள்ளார். இவர் நீண்டகாலமாக சட்டசபையில் உள்ளார். இவரை பாராட்டி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அப்போது மு.க. ஸ்டாலின், ‘துரைமுருகன் சட்டப்பேரவையின் நூற்றாண்டு நாயகன். அவர் எனக்கு வழிகாட்டியாக உள்ளார். கலைஞர் கருணாநிதிக்கும், எனக்கும் வழித்துணையாக இருந்தவர். எந்தத்துறை கொடுத்தாலும், அதில் முத்திரை பதிப்பார்’ என பாராட்டி பேசினார்.