குழந்தைகளுக்கு நூடுல்ஸ் என்றால் ரொம்ப பிடிக்கும்..நூடுல்ஸ் வைத்து சூப்பரான பக்கோடா செய்யலாம். இன்று இந்த ரெசிபியை எப்படி செய்றதுன்னு இப்போ பார்க்கலாம்..
தேவையான பொருட்கள்:
நூடுல்ஸ் பாக்கெட் – 1
மேகி மசாலா – 1
வெங்காயம் – 1
குடைமிளகாய் – பாதி
முட்டை கோஸ் – தேவைக்கு ஏற்ப
பச்சை மிளகாய் – 1
கொத்தமல்லி – தேவையான அளவு
கடலை மாவு – 4 டேபிள் ஸ்பூன்
சீரகப் பொடி, மிளகாய் பொடி, ரவை, உப்பு – தேவையான அளவு
செய்முறை:
வெங்காயம், குடைமிளகாய், முட்டை கோஸ், ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
முதலில் ஒரு கடாயில் தண்ணீர் ஊற்றி சூடானதும், மேகி மசாலா சேர்க்கவும். அத்துடன், நூடுல்ஸ் சேர்த்து வேக வைத்து தனியாக வைக்கவும்.
ஒரு பாத்திரத்தில் நறுக்கிய வெங்காயம், குடைமிளகாய், பச்சை மிளகாய், கொத்தமல்லி, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், சீரகத்தூள்,
இரண்டு டீஸ்பூன் ரவை, உப்பு போட்டு இதனுடன், வேக வைத்த நூடுல்ஸ் சேர்த்து நன்றாக பிசைந்துக் கொள்ளவும்.
மேலும், கலவையுடன் கடலை மாவை சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளவும்.
பிறகு, ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி நன்றாக சூடானதும், கலவையை உருண்டை பிடித்து அதில் போட்டு வறுத்து எடுத்தால் சுவையான நூடுல்ஸ் பக்கோடா ரெடி..!
_____________________________________________________________________________
உடனுக்குடன், உவப்பான செய்திகளுக்கு: http://Facebook page / easy 24 news