இலங்கையின் லிட்டில் லண்டன் என அழைக்கப்படும் நுவரெலியா வானில் ஆச்சரியமூட்டும் சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
கடந்த சில வாரங்களாக மலையகம் எங்கும் சீரற்ற காலநிலை நிலவியது. இதன் காரணமாக அங்குள்ள மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றாக பாதிக்கப்பட்டிருந்தது.
தொடர்ந்து பெய்து வந்த அடைமழை காரணமாக வழமைக்கு மாறாக கடும் குளிரான காலநிலை நிலவியது.
இந்நிலையில் நுவரெலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட பயணி ஒருவர் அங்குள்ள காட்சிகளை காணொளியாக பதிவு செய்துள்ளார்.
இந்த காட்சி பார்ப்பவர்களை அச்சுறுத்தும் வகையில் வான்பரப்பு காணப்பட்டுள்ளது. இதன்போது மின்னல் கீற்றுகளும் அழகாக பதிவு செய்யப்பட்டுள்ளது.
பனி முகில்களால் மூடப்பட்டு காணப்படும் நுவரெலியாவில் இவ்வாறான காட்சி என்பது அரியது என சுற்றுலா பயணிகள் தெரிவித்துள்ளனர்.