நீ எங்கு போனாலும் நானும் வருவேன்! ஆச்சரியமளிக்கும் ரோபோ சூட்கேஸ்
நாம் வெளியூருக்கு பிரயாணம் மேற்கொண்டால் நம் பொருட்களை சூட்கேசில் வைப்பது வழமையே, அதிகமான பாரம் இருக்கும் போது தூக்குவதற்கு கஷ்டப்படுவோம்.
இனிமேலும் இதை பற்றி கவலைக் கொள்ளத்தேவையில்லை, இதற்காக Travelmate Robotics நிறுவனம் தற்போது ரோபோடிக் சூட்கேஸை கண்டுபிடித்துள்ளது.
சென்சார் மூலம் இயங்கும் இந்த சூட்கேஸ் மணிக்கு 10.9 கி.மீ வேகத்தில் நகரும் தன்மையுடையது. நாம் எங்கு சென்றாலும் அது நம் பின்னாடியே வரும்.
இந்த சூட்கேஸை செங்குத்தாக நிமிர்த்தியோ, படுக்க வைத்தோ நாம் உபயோகப்படுத்த முடியும். எல்லா விதமான பாதைகளிலும் பயணிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
மேலும் அந்த சூட்கேஸ் மேலே ஓரளவுக்கு வெயிட்டான பொருளையும் நாம் வைக்க முடியும். அந்த சூட்கேசில் உள்ள ஒயரை கொண்டு நாம் கைபேசிக்கு சார்ஜ் கூட போட முடியும்.
இந்த சூட்கேஸின் விலை $399 என்பது குறிப்பிடத்தக்கது.