சம்பள அதிகரிப்பு தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட பேச்சுவார்த்தை
தோல்வியடைந்தமையை அடுத்து நீர் விநியோக சபை ஊழியர்கள் தொடர் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை ஆரம்பித்தனர்.
நீர் விநியோக சபை நூற்றுக்கு 17.5 வீத சம்பள அதிகரிப்பை வழங்க உடன்பட்ட போதும், தொழிற்சங்கம் அதனை நிராகரித்து, 25 வீத சம்பள அதிகரிப்பை கோரியது.
பேச்சுவாத்தையின் போது, தற்போது இருக்கின்ற நிதி நிலமையை கருத்திற் கொண்டும், நியாயமான சம்பள அதிகரிப்புக்கு உடன்படுமாறு நீர் வழங்கல் சபை கேட்டுக்கொண்டது.
அதற்கு மறுப்பு தெரிவித்து தொழிற்சங்கம் தொடா் பணிப்புறக்கணிப்பை ஆரம்பித்தது.