பிரான்ஸ், தொடர்ச்சியான காட்டுத் தீயினால் தாக்கப்பட்டு வரும் நிலையில், தீயணைப்புப் படையினரின் சுமையைக் குறக்கவும், அவர்களின் வுலுவை அதிகரிக்கவும், மேலும் ஆறு நீர்காவி விமானங்களைக் (Bombardiers d’eau) கொள்வனவு செய்ய உள்ளதாக, உள்துறை அமைச்சர் ஜெரார் கொலோம்ப் தெரிவித்துள்ளார்.
தீயணைப்புப் படையினரிடம், தற்போது இருக்கும் நீர் காவி விமானங்கள் போதுமானவையாக இருந்தாலும், அவற்றின் தொடர்ச்சியான இயக்கத்தின் பின்னர், அவை பழுதுபார்க்கப்பட்டுப் புனரமைக்கப்படும் சமயத்தில், தீயணைப்பப் படையினரின் வளம் மட்டுப்படுத்தப்பட்ட நிலைக்குத் தள்ளப்படும் என்பதால், இந்தக் கொள்வனவுத் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக 6, DASH-8 ரக விமானங்கள் தீயணைப்புப் படையில் இணைக்கப்பட உள்ளது.
தற்போது 23 நீர்காவி விமானங்கள் (2 Canadair, 9 Tracker, 2 Dash) தீயணைப்புப் படையினரின் மக்கள் பாதுகாப்புப் படையினரிடம் (La Sécurité civile) உள்ளமை குறிப்பிடத்தக்கது.