இன்று காலை கலேயிலுள்ள Vendin-le-Vieil சிறைச்சாலைத் தாக்குதல் தொடர்பாகப் பேசுவதற்காகவும் பார்வையிடவும் பிரான்சின் நீதியமைச்சர் நிக்கொல் பெலுபே (Nicole Belloubet) சென்றுள்ளார்.
இந்தச் சிறைச்சாலை அதிகரிகளின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலானது, பிரான்சின் சிறைச்சாலைகள் எங்கும் எதிரொலித்துப் பெரும் கலவரமாகி உள்ளது.
இந்தப் பிணக்கைத் தீர்க்கச் சென்ற நீதிமைச்சரை, வெளியில் போக் முடியாதவாறு சிறையதிகாரிகளும் அவர்களின் தொழிற்சங்கங்களான Ufap-Unsa Justice, FO-Pénitentiaire, CGT-pénitentiaire உம் இணைந்து தடுத்து வைத்துள்ளன.
Landes இல் உள்ள Mont-de-Marsan (Landes) சிறையில் இஸ்லாமியக் கைதி, ஏழு சிறையதிகாரிகள் மீது இன்று புதிதாகத் தாக்குதல் நடாத்தி உள்ள நிலையில் நிலைமை மேலும மோசமாகி உள்ளது.
‘நாங்கள் சிறையதிகாரிகளுடன் நேற்றுப் பேசி உள்ளோம். பேச்சுவாரத்தைக்கு அவர்கள் தயாராகவே உள்ளனர்;’ என நீதியமைச்சின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.