பாலியல் வன்முறை குற்றச்சாட்டின் கீழ் விசாரணையைஎதிர்கொண்ட இலங்கை அணிவீரர் தனுஸ்க குணதிலக குற்றமற்றவர் என நீதிமன்றம் அறிவித்துள்ள நிலையில் ஊடகங்களிற்கு கருத்து தெரிவித்துள்ளார்.
குற்றம்சாட்டுக்குள்ளான பின்னர் முதல்தடவையாக ஊடகங்களிற்கு கருத்து தெரிவித்துள்ள அவர் தீர்ப்பு அனைத்தையும் சொல்கின்றது என குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 11 மாதங்கள் எனக்கு மிகவும் கடினமானவை நான் எனது முகாமையாளாகள் சட்டத்தரணிகள் குறிப்பாக முருகன் தங்கராஜா ஆகியோருக்கு எனது நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றேன் நான் அவுஸ்திரேலியாவில் உள்ள அனைவருக்கும் நன்றி தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றேன் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனது பெற்றோர்கள் இலங்கையிலிருந்து எனக்கு உதவியவர்கள் அனைவருக்கும் நன்றி எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
யார் பொய்சொன்னார்கள் யார் பொய்சொல்லவில்லை என நீதிபதி தெரிவித்துள்ளார்-எனது வாழ்க்கை மீண்டும் இயல்புநிலைக்கு திரும்பியுள்ளது குறித்து நான் மகிழ்ச்சியடைகின்றேன் நான் மீண்டும்; கிரிக்கெட் விளையாட விரும்புகின்றேன் என தனுஸ்ககுணதிலக தெரிவித்துள்ளார்.