சென்னையில் அடுத்த 3 மணி நேரத்திற்கு கனமழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவிக்கப்பட்டிருந்தது.
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் அடுத்த ஐந்து நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே அறிவித்திருந்தது. குறிப்பாக, வருகின்ற 9-ம் தேதி அன்று வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக இருப்பதால் தமிழகம் முழுவதும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டது.
இந்நிலையில், நேற்று இரவு முதல் இன்று அதிகாலை வரை சென்னையில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. இதனால், அதிகபட்சமாக சென்னையில் 20 செ.மீ மழை பதிவானது. மேலும், சென்னையில் அடுத்த 3 மணி நேரத்திற்கு கனமழை நீடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நீடிப்பதால், சென்னையில் அடுத்த மூன்று நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும், இதனால் சென்னைக்கு ரெட் அலர்ட் விடுத்தும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்து அறிவித்துள்ளது.
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – YouTube | [email protected]