ஆஸ்திரேலியாவில் மிகப்பெரிய நிலக்கரி சுரங்கம் அமைக்க உள்ள அதானி நிறுவனத்திற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. நாடு முழுதும் ஆயிரக்கணக்கான மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
செய்தி
ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து மாகாணத்தில் மிகப்பெரிய நிலக்கரி சுரங்கம் அமைக்கப்பட உள்ளது. இதற்கு சுற்றுச்சூழல் மற்றும் நிதி பிரச்னை காரணமாக கடந்த ஓராண்டாக சுரங்கம் அமைப்பதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது. ஆனால், இந்த திட்டத்திற்கு சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் ஆரம்பம் முதல் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். 45 இடங்களில் ‛ ஸ்டாப் அதானி ‘ இயக்கம் நிறுத்தப்பட்டது. சுரங்கம் அமைப்பதற்கு ஆஸ்திரேலிய மக்கள் தொகையில் பெரும்பாலானோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக அந்நாட்டு மீடியா ஒன்று செய்தி வெளியிட்டது.
பெரிய பிரச்னை
இதனையடுத்து, ஆஸ்திரேலியாவின் பெரும்பாலான நகரங்களில் போராட்டம் நடந்தது. சிட்னி கடற்கரையில் கூடிய ஆயிரகணக்கான மக்கள் கூடி ‛ஸ்டாப் அதானி’ விடிவில் நின்று தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர். சுரங்கம் அமைப்பது நாட்டின் பெரிய பிரச்னையாக உள்ளதாக இந்த போராட்டத்தை ஏற்பாடு செய்தவர்கள் கூறினர். நிலக்கரி சுரங்கம் அமைப்பதால், பூமி வெப்பமயமாதல் அதிகரிக்கும். சுரங்கம் அமையும் பகுதிக்கு பலத்த சேதம் ஏற்படும் எனக்கூறியுள்ளனர்.
வரி வருவாய்
அதானி நிறுவனம் கூறுகையில், இந்த திட்டத்தால், உரிமைத்தொகை மற்றும் வரியாக பல பில்லியன் டாலர் கிடைக்கும். வேலைவாய்ப்புகள் உருவாகும். இந்தியாவின் ஊரக பகுதிகளில் மின்சாரம் கிடைக்க நிலக்கரி ஏற்றுமதி செய்யப்படும் என தெரிவித்துள்ளது.