ஜப்பானின் மிகப்பெரிய நகரமும் மின்சார நகரம் என்றும் வர்ணிக்கப்படும் டோக்கியோவில் கடந்த ஜூலை மாதம் 23ஆம் திகதி வரை நடைபெற்றுவந்த 32ஆவது டோக்கியோ ஒலிம்பிக் போட்டி விழா இன்று பிரம்மாண்ட நிறைவு விழாவுடன் முடிவுக்கு வந்தது.
206 நாடுகளை சேர்ந்த ஒலிம்பிக் அணிகள், 11,326 வீரர்கள், 33 விளையாட்டில் 339 போட்டிப்பிரிவுகளில் , 16 நாட்கள் இந்த ஒலிம்பிக் நடந்து முடிந்துள்ளது.
டோக்கியோ ஒலிம்பிக் போட்டியின் நிறைவு விழாவில் நேற்று இரவு ஜப்பான் ரேப்பட்டி 8 மணியளவில் ஆரம்பமானது. வெற்று மைதானத்தில் நடைபெற்ற நிறைவு விழா கலைகட்டியதா என்றால் இல்லையென்றே சொல்ல வேண்டும்.
நிறைவு விழாவின் தொடக்கத்தில் வீரர்கள் மைதானத்திற்குள் அணி வகுக்க ஜப்பான் நாட்டின் கலை நிகழ்ச்சிகளுடன் நிறைவு விழா ஆரம்பமானது.
அதன்பிறகு ஒலிம்பிக் கொடி இறக்கபட்டு அடுத்த ஒலிம்பிக்கை நடத்தும் நகரமான பிரான்ஸின் பாரிஸ் நகர மேயரிடம் ஒப்படைக்கப்பட்டது.
சம்பிதாயபூர்வமன ஒலிம்பிக் நிறைவு நிகழ்வுகளின் பின்னர் பேசிய சர்வதேச ஒலிம்பிக் சங்கத்தின் தலைவர் தோமஸ் பாக் வீரர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்ததோடு கொரோனாவுக்கு மத்தியில் வெற்றிகரமான ஒலிம்பிக்கை நடத்தியமைக்கு ஜப்பான் நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்தார்.
அத்தோடு கடந்த 16 நாட்களாக எரிந்துகொண்டிருந்த ஒலிம்பிக் தீபம் அணைக்கப்பட்டதோடு வானைப் பிழந்த பட்டாசுக்களுடன் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் முடித்து வைக்கப்பட்டது.
கொரோனா தொற்று பரவல் காரணமாக 2020 ஆம் ஆண்டு நடத்தப்பட வேண்டிய ஒலிம்பிக்கை ஓராண்டு ஒத்திவைத்து இவ்வாண்டு நடத்தப்பட்டது.
ஆனாலும் இததற்கு டோக்கியோ 2020 என்றுதான் பெயர். நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் ஒலிம்பிக் போட்டிகள் அடுத்த முறை முன்று வருடங்களில் அதாவது 2024 ஆம் ஆண்டு பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறவுள்ளது.
இதற்கு முன்னதாக 1900 ஆம் ஆண்டு மற்றும் 1924 ஆம் ஆண்டுகளில் பாரிஸ் நகரில் ஒலிம்பிக் நடத்தப்பட்டுள்ளது.
டோக்கியோ ஒலிம்பிக்கில் ஒட்டுமொத்தமாக 39 தங்கப் பதக்கங்களை வென்றுள்ள அமெரிக்கா 41 வெள்ளி, 33 வெண்கலம் உட்பட மொத்தம் 113 பதக்கங்களை வென்று பதக்கப் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்துள்ளது.
ஆரம்பம் முதலே ஆதிக்கம் வெலுத்தி வந்த சினாவோ 38 தங்கப் பதக்கங்கள், 32 வெள்ளி, 18 வெண்கலம் என மொத்தம் 88 பதக்கங்களுடன் இரண்டாவது இடத்தில் இருக்கிறது.
போட்டியை நடத்திய ஜப்பான் 27 தங்கப்பதக்கங்கள், 14 வெள்ளி மற்றும் 17 வெண்கலப்பதக்கங்களுடன் மூன்றாவது இடத்தில் உள்ளது.
கடைசி தங்கம்
டோக்கியோ ஒலிம்பிக்கின் முதலாவது தங்கப்பதக்கத்தை சீனா வென்றதைப் போல டோக்கியோ ஒலிம்ப்கின் கடைசி தங்கப்பதக்கமான 339ஆவது தங்கப் பக்கத்தை செர்பியா நாட்டின் ஆண்கள் போட்டர் போலோ அணி வென்றது.
கிரீஸ் நாட்டுடன் நடைபெற்ற இறுதிப் போட்டியில் 13-10 புள்ளிகள் அடிப்படையில் வென்ற செர்பியா, கடைசி தங்கப்பதக்கத்தை வென்ற நாடு என்ற பதிவைப் பதித்தது.
நிலைநாட்டப்பட்ட உலக சாதனைகள்
பெண்கள் ட்ராக் சைக்கிள் பந்தயம் – ஜேர்மனி
ஆண்கள் ட்ராக் சைக்கிள் பந்தயம் குழு: – இத்தாலி
மகளிர் 200 மீற்றர் பிஸ்டோக் நீச்சல்: – டட்ஜானா ஷோன்மேக்கர் (தென்னபிரிக்கா) (2: 18.95 மீ)
ஆண்கள் 100 மீற்றர் பட்டர்பிளை நீச்சல் போட்டி: கேலெப் டிரஸ்ஸல் -– அமெரிக்கா (49.45 வினாடிகள்)
ஆண்கள் 4 × 100 மீற்றர் மெட்லி ரிலே: – அமெரிக்கா (3: 26.78 மீ)
ஆண்களுக்கான பளூ தூக்கல் -: லாஷா தலாகாட்சே – ஜோர்ஜியா (488 கிலோ)
பெண்கள் 4 × 100 மீற்றர் ப்ரீஸ்டைல் நீச்சல் -: அவுஸ்திரேலியா (3: 29.69)
மகளிர் முப்பாய்ச்சல் -: யூலிமர் ரோஜாஸ் – வெனிசுலா (15.67 மீட்டர்)
400 மீற்றர் தடைதாண்டல் ஒட்டம்-: கார்ஸ்டன் வார்ஹோல்ம் – நோர்வே (45.94 வினாடிகள்)
மகளிர் உள்ளக சைக்கில் ஓட்டம்: – சீனா (31.804 வினாடிகள்)
பெண்கள் 4×200 மீற்றர் ஃப்ரீஸ்டைல் நீச்சல் -: சீனா (7: 40.33 நிமிடங்கள்)
73 கிலோ பிரிவில் ஆண்கள் பளுதூக்கல் :- ஷி ஜியாங் – சீனா
மகளிர் 400 மீற்றர் தடை தாண்டல் ஓட்டம்: சிட்னி மெக்லாஹ்லின் – அமெரிக்கா (51.46 வினாடிகள்)
ஆண்களுக்கான 1500 மீற்றர் ஓட்டம்: ஜேகோப் இங்க்பிரிட்சன் – நோர்வே (3 நிமிடம் 28.32 வினாடி)
மகளிருக்கான 1500 மீற்றர் ஓட்டம்-: ஃபெய்த் கிபியாகோன் –- கென்யா (3 நிமிடம் 53.11 வினாடி)
குழு நிலைப் போட்டிப் பிரிவுகளில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற நாடுகள் (ஆண். பெண் இரு பிரிவுகளிலும் )
மல்யுத்தம்
ஆண்கள்: ஆர்.ஓ.சி., அமெரிக்கா, கியூபா
பெண்கள்: ஜப்பான், அமெரிக்கா, ஜேர்மனி
அம்பெய்தல்
ஆண்கள்: ஆர்.ஓ.சி., துருக்கி, இத்தாலி
பெண்கள்: கொரியா, ஆர்.ஓ.சி., இத்தாலி
ஜிம்னாஸ்டிக்
ஆண்கள்: சீனா, ஜப்பான், ஆர்.ஓ.சி.
பெண்கள்: அமெரிக்கா, ஆர்.ஓ.சி., சீனா
தடகளம்
ஆண்கள்: இத்தாலி, அமெிக்கா, கென்யா
பெண்கள்: அமெரிக்கா, ஜமைக்கா, கென்யா
குத்துச்சண்டை
ஆண்கள்: கியூபா, பிரித்தானியா, ஆர்.ஓ.சி.
பெண்கள்: துருக்கி, பிரித்தானியா, ஜப்பான்
சைக்கிளோட்டம்
ஆண்கள்: நெதர்லாந்து, சுலோவேனியா, ஆஸதிரியா
பெண்கள்: நெர்லாந்து, ஆஸ்திரியா, சுவிட்ஸர்லாந்து
குதிரையேற்றம்
ஜேர்மனி, பிரித்தானியா,சுவிடன்
வாள் சண்டை
ஆண்கள்: ஆர்.ஓ.சி., பிரான்ஸ், கொரியா
பெண்கள்: ஆர்.ஓ.சி., எஸ்டோனிய, அமெரிக்கா
கால்பந்தாட்டம்
ஆண்கள்: பிரேசில், ஸ்பெய்ன், மெக்சிகோ
பெண்கள்: கனடா, சுவிடன், அமெரிக்கா
கோல்ப்
ஆண்கள்: அமெரிக்கா, சுலோவேனியா, சைனிஸ்தாய்பே
பெண்கள்: அமெரிக்கா, ஜப்பான், நியூஸி.
ஹொக்கி
ஆண்கள்: பெல்ஜியம், ஆஸி., இந்தியா
பெண்கள்: நெதர்லாந்து, ஆர்ஜன்டீனா, பிரித்தானியா
ஜூடோ
ஆண்கள்: ஜப்பான், ஜோர்ஜியா, செக்.குடியரசு
பெண்கள்: ஜப்பான், கொசோவா, பிரான்ஸ்
கராட்டி
ஆண்கள்: ஜப்பான், இத்தாலி, பிரான்ஸ்
பெண்கள்: எகிப்து, ஸ்பெய்ன், பல்கேரியா
நீச்சல் மரத்தன்
ஆண்கள்: ஜேர்மனி, ஹங்கேரி, இத்தாலி
பெண்கள்: பிரேசில், நெதர்லாந்து, ஆஸி.
றக்பி 7
ஆண்கள்: பிஜி, நியூஸிலாந்து, ஆர்ஜன்டீனா
பெண்கள்: நியூலாந்து, பிரான்ஸ், பிஜி
துப்பாக்கி சுடுதல்
ஆண்கள்: அமெரிக்கா, சீனா, செக்.குடியரசு
பெண்கள்: ஆர்.ஓ.சி, அமெரிக்கா, சீனா
நீச்சல்
ஆண்கள்: அமெரிக்கா, பிரித்தானி, ஆர்.ஓ.சி.
பெண்கள்: ஆஸி., அமெரிக்கா, சீனா
மேசைப்பந்து
ஆண்கள்: சீனா, ஜேர்மனி, ஜப்பான்
பெண்கள்: சீனா, ஜப்பான், ஹொங்கொங்
டென்னிஸ்
ஆண்கள்: குரோஷியா, ஜேர்மனி, ஆர்.ஓ.சி
பெண்கள்: செக்.குடியரசு, சுவிட்ஸர்லாந்து, பிரேசில்
கரப்பந்தாட்டம்
ஆண்கள்: பிரான்ஸ், ஆர்.ஓ.சி., ஆர்ஜன்டீனா
பெண்கள்: அமெரிக்கா, பிரேசில், சேர்பியா
பளுதூக்கல்
ஆண்கள்: சீனா, ஜோர்ஜயா, கட்டார்
பெண்கள்: சீனா, ஈக்வடோர், சைனிஸ் தாய்பே
வெறுங்கையுடன் நாடு திரும்பிய இலங்கை
டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இலங்கையிலிருந்து ஒன்பது வீரர்கள் 7 போட்டிப் பிரிவுகளில் பங்கேற்றிருந்தனர்.
ஆனால் இதில் ஒருவர் கூட அடுத்த சுற்றுக்கு முன்னேறவில்லை என்பதே சோகம். ஆக இலங்கை அணி வெஙை்கையுடன் நாடு திரும்பியது.
இந்தியாவுக்கு ஒரு தங்கம்
ஒலிமபிக்கில் பங்கேற்ற இரண்டாவது மிகப்பெரிய சனத்தொகை கொண்ட நாடானா இந்தியா இந்த ஒலிம்பிக்கில் ஒரு தங்கம், 2 வெள்ளி, 4 வெண்கலப் பதக்கத்தை வென்றது. இந்தியா இந்த பட்டியலில் 48 ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.
ஒட்டுமொத்த உலகமும் கொரோனாவால் பிடித்திருக்கும் நிலையில் நடத்தப்பட்ட ஒலிம்பிக் வெற்றி பெற்றதா என்பதை வரலாறு தீர்மானிக்கும். ஆனால் வியைாட்டு உலகின் மகத்துவத்தை டோக்கியோ ஒலிம்பிக் எடுத்துக் காட்டியுள்ளது என்பது திண்ணம்.
_____________________________________________________________________________
உடனுக்குடன், உவப்பான செய்திகளுக்கு: http://Facebook page / easy 24 news