நிர்பயா பலாத்கார வழக்கில் தூக்கு தண்டனை பெற்ற குற்றவாளிகளில் இருவர் தீர்ப்பை எதிர்த்த மறு சீராய்வு மனு செய்துள்ளனர்.
2012-ம் ஆண்டு டிசம்பர் 16-ம் தேதி டில்லியில் மருத்துவ மாணவி ஓடும் பஸ்சில் 5 பேர் கொண்ட கும்பலால் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டார்.
நாட்டை உலுக்கிய இந்த கொடூர சம்பவத்தில் குற்றவாளிகள் முகேஷ், பவன்குமார் குப்தா, வினாய் ஷர்மா, அக்ஷய் குமார், ராம்சிங் ஆகியே 5 பேருக்கும் சுப்ரீம் கோர்ட் தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. திகார் சிறையில் அடைக்கப்பட்டனர்.இதில் ராம்சிங் சிறையில் தற்கொலை செய்து கொண்டார்.
இந்நிலையில் வினாய் ஷர்மா, பவன்குமார் குப்தா ஆகிய இருவரும் தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் கடந்த 12-ம் தேதி மறுசீராய்வு மனு தாக்கல்செய்தனர். ஜனவரி 22-ம் தேதி விசாரணைக்கு வரும் என தெரிகிறது