நிரோதினி பரராஜசிங்கம் ஆசிரியையின் வீட்டில் ஒரு சந்திப்பு! கனடா உங்களை அன்புடன் வரவேற்கின்றது !! Welcome to Canada, Dr. A. Kaliyamurthy, Key note speaker at the Tamil Mirror Gala, on Nov 6, 2022 at 4 pm, at Chinese Cultural Center, Toronto ….Easy24News.com












புலம்பெயர் மண்ணில் கலை வளர்க்கும் நிரோதினி பரராஜசிங்கம்
புலம்பெயர்ந்து தஞ்சமடைந்த தமிழர்களின் ஓய்வற்ற வாழ்க்கையில் கலைத் தேவைகளை பூர்த்தி செய்பவர்கள் உன்னதமாக மதிக்கப்பட வேண்டியவர்கள் ஆவர். அந்த வகையில் பிரபல நடன ஆசிரியர் நிரோதினி பரராஜசிங்கம் அவர்களும் குறிப்பிடத்தக்கவர்.
இவர் புலம்பெயர் தேசத்தில் தமிழரின் பண்பாட்டு கலையான நடனத்தை புதிய தலைமுறையினருக்கு கற்பித்து அந்தக் கலையின்பால் பெரும் ஆர்வத்தையும் ஈடுபாட்டையும் சாதனையையும் ஏற்படுத்தி வருகிறார்.
எளிமையும் பேராற்றலும் கொண்ட இவர்மீது இன்றைய இளைய தலைமுறை கலை மாணவர்கள் பெரும் மதிப்பும் பற்றும் கொண்டிருப்பது இவரின் விளம்பரமற்ற நடனக் கலையாளுமைக்கு தக்க சான்றாக அமைகின்றது.
முறைப்படி நடனத்தைப் பயின்று அந்தத் துறையில் பெரும் ஆளுமையாக தன்னை வளர்த்து இப்போது அந்தக் கலையை புலம்பெயர் தேச தமிழ் தலைமுறைகளுக்கு விதைக்கும் நிரோதினி அவர்களுக்கும் நிரோ டான்ஸ் கிரியேசன்ஸ் அமைப்பிற்கும் எமது வாழ்த்துக்கள்.
இந்த இணைப்பில் சென்று நிரோதினி அவர்களின் யூடியூப் சனலில் அவரது ஆற்றுகையை கண்டுகளிக்குமாறு நண்பர்கள் மற்றும் உறவுகளை அன்புரிமையுடன் அழைத்து நிற்கிறேன்.
நிரோதினி பரராஜசிங்கம் அவர்களின் ஆற்றுகை