இரண்டாவது டெஸ்டின் நான்காம் நாள் ஆட்டத்தில் விராட் கோஹ்லியின் இந்திய அணி 372 ஓட்டங்களினால் நியூஸிலாந்தை வீழ்த்தி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 1-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.
முதல் இன்னிங்ஸில் நியூசிலாந்தை 62 ஓட்டங்களுக்குள் ஆல் அவுட் செய்த இந்தியா, இரண்டாவது இன்னிங்ஸில் 540 என்ற இமாலய வெற்றியிலக்கை நிர்ணயித்தது.
இமாலய இலக்கினை துரத்திய நியூஸிலாந்து ஓட்டங்களை மாத்திரம் பெற, மும்பையில் ஒரு உறுதியான வெற்றியை பதிவு செய்தது இந்தியா.
இரண்டாவது இன்னிங்ஸில் நியூசிலாந்தின் கடைசி 5 விக்கெட்டுகளும் வெறும் 27 ஓட்டங்களுக்குள் வீழ்த்தப்பட்ட நிலையில் நான்காம் நாளான இன்று இந்தியா இரட்டை வேகத்தில் அதன் பந்து தாக்குதல்களை தொடுத்தது.
புதிய பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தலைமையில் இந்தியா அணி பெற்ற முதல் டெஸ்ட் வெற்றி இதுவாகும்.
372 ஓட்டங்ளினால் வெற்றி என்பது டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ஓட்ட வித்தியாசத்தில் இந்திய பெற்ற மிகப்பெரிய வெற்றியாகும்.
இதற்கு முன்னர் 2015 இல் தென்னாபிரிக்காவை 337 ஓட்டங்களினால் வீழ்த்தியிருந்தது.
இந்த வெற்றியின் மூலம் இந்தியா இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 1:0 என்ற கண்ககில் நிறைவு செய்தது.
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – YouTube | [email protected]