நியூஸிலாந்துக்கு எதிராக அடுத்த மாதம் ஆரம்பமாகவுள்ள இரு போட்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கெடுப்பும் வாய்ப்பினை இங்கிலாந்து அணியின் வேகப் பந்து வீச்சாளர் ஜோஃப்ரா ஆர்ச்சர் நழுவ விட்டுள்ளார்.
ஜோஃப்ரா ஆர்ச்சரின் முழங்கையில் ஏற்பட்டுள்ள வலி காரணமாகவே அவர் நியூஸிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரிலிருந்து விலக்கப்பட்டுள்ளதாக இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் வாரியம் ஞாயிற்றுக்கிழமை உறுதிப்படுத்தியது.
கடந்த வாரம் கென்ட்டுக்கு எதிராக சசெக்ஸிற்காக நடந்த கவுண்டி சாம்பியன்ஷிப் போட்டியின் போது ஆர்ச்சரின் வலது முழங்கையில் வலி ஏற்பட்து. இதன் விளைவாக இரண்டாவது இன்னிங்சில் ஐந்து ஓவர்களுக்கு மாத்திரே பந்து வீசினார்.
கடந்த ஆண்டு தொடக்கத்தில் தென்னாபிரிக்காவுடனான சுற்றுப்பயணத்தில் ஆர்ச்சரின் மூட்டு எலும்பு முறிவினால் அவரின் வலது முழங்கை தொடர்ந்தும் சிக்கலை எதிர்கொண்டு வருகின்றது.