நியூஸிலாந்து அணிக்கெதிரான முதலாவது டெஸ்ட் போட்டியின் நேற்றைய மூன்றாவது நாள் முடிவில் 6 விக்கெட்டுக்களை இழந்து 401 ஓட்டங்களை குவித்த பங்களாதேஷ் அணி 73 ஓட்டங்கள் முன்னிலையில் வலுவான நிலையில் உள்ளது.
நியூஸிலாந்தின் மவுன்கனியுவில் நடைபெற்று வரும் இவ்விரு அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி ஆண்டின் முதல் நாளான ஜனவரி முதலாம் திகதியன்று ஆரம்பமானது.
முதலில் துடுப்பெடுத்தாடப் பணிக்கப்பட்ட நியூஸிலாந்து அணி தமது முதல் இன்னிங்ஸில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 328 ஓட்டங்களைப் பெற்றது.
துடுப்பாட்டத்தில் அவ்வணி சார்பில் மூன்றாம் இலக்க துடுப்பாட்ட வீரராக களமிறங்கிய டெவொன் கொன்வே 125 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார்.
அவரதை் தவிர ஹென்றி நிக்கலஸ் 75 ஓட்டங்களையும், ஆரம்த் துடுப்பாட்ட வீரரில் ஒருவரான பெற வில் யங் 52 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.
பந்துவீச்சில் ஷொரிபுல் இஸ்லாம், மெஹெதி ஹசன் மிராஸ் இருவரும் தலா 3 விக்கெட்டுக்களையும் அணித்தலைவர் மொமினுல் ஹக் 2 விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர்.
தமது முதல் இன்னிங்ஸுக்காக துடுப்பெடுத்தாட களமிறங்கிய பங்களாதேஷ் அணி நேற்றைய மூன்றாவது நாள் நிறைவில் 6 விக்கெட்டுக்களை இழந்து 401 ஓட்டங்களை பெற்றுள்ளது.
மஹ்மதுல் ஹசக் ஜோய் (78),நஜ்முல் ஹசன் ஷென்டோ (64), மொமினுல் ஹக் (88), லிட்டன் தாஸ் (86) அரைச் சதங்கள் அடித்து பங்களாதேஷ் அணியின் துடுப்பாட்டத்துக்கு உறுதுணையளித்தனர். யசீர் அலி (11) மற்றும் மெஹதி ஹசன் மிராஸ் (20) இருவரும் ஆடுகளத்தில் ஆட்டமிழக்காது உள்ளனர்.
பந்துவீச்சில் நியூஸிலாந்து அணி சார்பில் ட்ரென்ட் போல்ட், நெய்ல் வேக்னர் இருவரும் தலா 3 விக்கெட்டுக்களை கைப்பற்றினர்.
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – YouTube | [email protected]