உலகிலேயே முதல் நாடாக நியூசிலாந்தில் 2018ஆம் ஆண்டு புத்தாண்டு பிறந்தது. இதனை அந்நாட்டின் ஆக்லாந்து நகரில் வாணவேடிக்கைகளுடன் வரவேற்று மக்கள் கோலாகல கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
நியூசிலாந்து நாட்டின் ஆக்லாந்து நகரத்தில் 2018ம் ஆண்டு பிறந்தது. உலகிலேயே முதல் நாடாக நியூசிலாந்தில் புத்தாண்டு பிறந்துள்ளது. ரஷ்யா நாட்டில் சில பகுதிகளில் மாலை 5.30 மணிக்கு புத்தாண்டு பிறந்தது. அதனை தொடர்ந்து ஆஸ்திரேலியா நாட்டின் சிட்னி நகரில் இந்திய நேரப்படி மாலை 6.30 மணிக்கு புத்தாண்டு பிறந்தது.
வாண வேடிக்கைகளுடன் உற்சாகம்
புத்தாண்டை முன்னிட்டு ஆக்லாந்து நகரம் வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. மக்கள் ஒருவருக்கொருவர் புத்தாண்டு வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டனர்.