யாழ்ப்பாணப்பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் என். சண்முகலிங்கன் அஞ்சலி
கேசவன் அண்ணனின் திடீர் மறைவு நெஞ்சிலே எழுதும் துயரம் தாங்கமுடியாதது.தந்தையார் சட்டத்தரணியும் சமூக ஆன்மீகத்தலைவருமான கனகரத்தினம் அவர்களின் வழியில் நிமிர்ந்தது அவர் வாழ்வு.
யாழ் நீதிமன்ற பதில் நீதவான், யாழ்மாவட்ட சட்டத்தரணிகள் சங்க செயலாளர் ,எங்கள் யாழ்ப்பாணப்பல்கலைக்கழக பேரவை உறுப்பினர், திவ்விய ஜீவன சங்க தலைவர் என விரிந்தது அவர் மேலான பணிகள்.
அவரோடு வாழ்ந்த பொழுதுகளின் மேன்மையினை உரைத்திட வார்த்தையில்லை. ஈடுசெய்ய முடியாத இழப்பினில் தவிக்கும் உறவுகளோடு அவர் மேலான நினைவுகளைக் காக்கும் உறுதியுடன் பிரார்த்தனை செய்வோம்.