ஜனாதிபதி பதவி என்பது பொறுப்பு வாய்ந்த பதவியாகும்.ஜனாதிபதி மைத்திரி அவர்களே அவசரப்பட்டுக் கோபப்படாது நிதானமாகப் பேசுங்கள் என்று நான் கேட்டுக் கொள்கின்றேன். இவ்வாறு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது,
தேர்தல் மேடைகளில் எம்மைக் கடுமையாகத் திட்டித் தீர்ப்போருக்கு அடுத்த ஆண்டு ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ளது என்பது மறந்துவிட்டது.
விவசாயி ஒருவரின் புதல்வர் நாட்டின் அரச தலைவரானதும் நாட்டில் விவசாயத்துறை தழைத்தோங்கும் என்றே மக்கள் கருதினர். துரதிர்ஷ்டவசமாக அவ்வாறு நடக்கவில்லை. நாம் கடன் பெற்றுக்கொண்டுள்ளதாகக் குற்றம் சுமத்தி வரும் இவர்களுக்கு இவர்கள் பெற்றுக் கொண்டுள்ள பெரியளவு கடன் பற்றித் தெரியவில்லை.
எம்மை அவமரியாதை செய்து சிறையில் போடுவதாகச் சூளுரைக்கும் ஒரு சிலருக்கு அடுத்த ஆண்டு ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ளது என்பது பற்றி மறந்து விட்டது -– என்றார்.