சமூக வலைத்தளங்களில் நாளை முதல் நாளாந்த மின்வெட்டு 10 மணித்தியாலங்களாக அதிகரிக்கப்படும் என பரவி வரும் வதந்திகளில் உண்மையில்லை என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
நாளாந்த மின்வெட்டு காலம் அடுத்த வாரம் முதல் 3 மணித்தியாலங்கள் 20 நிமிடங்களாக குறைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அதனை நீடிக்க வேண்டிய அவசியமில்லை எனவும் இலங்கை மின்சார சபையின் தலைவர் எம்.எம்.சி பெர்டினாண்டோ ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
நுரைச்சோலை அனல்மின் நிலையத்தின் திருத்தப் பணிகளை விரைவில் நிறைவு செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருவதாக இலங்கை மின்சார சபை அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர்.
இந்நிலையில், செவ்வாய்க்கிழமை (3) நுரைச்சோலை அனல்மின் நிலையத்தில் உள்ள 270 மெகாவாட் மின்னுற்பத்தி ஒன்றில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதையடுத்து, கடந்த வாரம் முழுவதும் அனல் மின் நிலையங்களுக்கு அதிக டீசலை விநியோகிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – யூடியூப் YouTube | [email protected]