நடமாட்டக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள காலப்பகுதியில் கொழும்புக்குள் பிரவேசிக்கும் மற்றும் கொழும்பிலிருந்து வெளியேறும் வாகனங்களுக்காக வழங்கப்பட்டு வந்த ஸ்டிக்கர்களுக்கு பதிலாக நாளை (07) முதல் புதிய ஸ்டிக்கர் முறையொன்றை அறிமுகப்படுத்தவுள்ளதாக காவல்துறை பேச்சாளர் பிரதி காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
இதற்கமைய, கொழும்புக்குள் பிரவேசிக்கும் இடங்களில் தங்களின் முழு விபரங்களை வழங்கிய பின் நாளாந்தம் கொழும்புக்குள் பிரவேசிக்கும் வாகனங்களுக்காக இந்த ஸ்டிக்கர்கள் வழங்கப்படவுள்ளன.
இந்த ஸ்டிக்கர், நடமாட்டக் கட்டுப்பாடு அமுலில் இருக்கும் வரை செல்லுபடியாகும் என காவல்துறை பேச்சாளர் தெரிவித்தார்.
இதனால், கொழும்புக்குள் பிரவேசிக்கும் வாகனங்கள் எதிர்நோக்கும் அசௌகரியங்களுக்கு தீர்வு கிடைக்கும் என எதிர்பார்ப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.
அத்துடன், இந்த புதிய ஸ்டிக்கர்களை அநாவசிய தேவைகளுக்காக பயன்படுத்த வேண்டாம் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.