கொழும்பிலுள்ள இலங்கை மின்சார சபை தலைமையகத்தில் அதன் தலைவர், மின்சார சபை ஊழியர்களால் சிறைப்பிடித்து வைக்கப்பட்டிருந்த நிலையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
மின்சார சபை தலைவரை அவரின் உத்தியோகபூர்வ அறைக்குள் வைத்து ஊழியர்கள் சிறைப்பிடித்தனர்.
2015 ஆம் ஆண்டு மின்சார சபை நிர்வாக அதிகாரிக்கு முறையற்ற விதத்தில் வேதன உயர்வு வழங்கப்பட்டதாக தெரிவித்து, அதனை உடன் இரத்துச் செய்தல் உள்ளிட்ட சில கோரிக்கைகளை முன்வைத்து மின்சார சபை ஊழியர்கள் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக எமது செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை , இந்த சம்பவத்தில் ஊழியர்களை தாக்கியதாக குற்றம் சுமத்தி மின்சார சபை தொழிற்சங்கம் நாளை முதல் பணிபகிஷ்கரிப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளது.
நாளை காலை தொடக்கம் நாடளாவிய ரீதியில் இந்த பணிபகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்படவுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.