மின்சாரக் கட்டணத்தை 75 சதவீதத்தினால் அதிகரிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்தார்.
கொள்ளுப்பிட்டியில் உள்ள ஆணைக்குழுவின் அலுவலகத்தில் சற்றுமுன் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.
கடந்த 2013 ஆம் ஆண்டிற்குப் பின்னர் முதன்முறையாக மின்சாரக் கட்டணத்தை ஒட்டுமொத்தமாக 75 வீதத்தினால் அதிகரிக்க மின்சாரசபைக்கு பொதுப்பயன்பாடுகள் ஆனைக்குழு அனுமதி வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, குடிநீர் கட்டணத்தை உயர்த்துவதற்கான முன்மொழிவுக்கு அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.
இதுதொடர்பான பிரேரணையை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல நேற்று (08) அமைச்சரவையில் சமர்ப்பித்துள்ளதுடன் அதற்கு அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளது.
அதன்படி, குடிநீர் கட்டணத்தில் திருத்தம் செய்வது குறித்து எதிர்காலத்தில் அறிவிக்கப்பட உள்ளது.
கடந்த 10 வருடங்களாக நீர் கட்டணத்தில் திருத்தம் மேற்கொள்ளப்படவில்லை என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.