ஜெனிவா மனித உரிமை பேரவையில் நாளை நடைபெறவுள்ள இலங்கை தொடர்பான விவாதத்தின் போது இலங்கை அரசாங்கமானது ஜெனிவா பிரேரணையை எவ்வாறு அமுல்படுத்துகின்றது என்பது குறித்த விரிவான அறிக்கையொன்றை மனித உரிமை பேரவைக்கு சமர்ப்பிக்கவுள்ளது. இலங்கையின் சார்பில் இந்த விவாதத்தில் கலந்து கொள்ள அமைச்சர்களான திலக் மாரப்பன, சரத் அமுனுகம, பைஸர் முஸ்தபா ஆகியோர் இந்த அறிக்கையை இலங்கையின் சார்பாக மனித உரிமை பேரவையில் சமர்ப்பிக்கவுள்ளனர். இதில் இலங்கையானது பல்வேறு சவால்களுக்கு மத்தியில் 30-/1 பிரேரணையை இலங்கையில் அமுல்படுத்தி வருவதாக தெரிவிக்கவுள்ளது.
இது தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள வெளி விவகார அமைச்சு தெரிவித்துள்ளதாவது மனிதஉரிமைகள்பேரவையின்கோரிக்கைக்கமைய மனிதஉரிமைகளுக்கானஉயர் ஆணையாளர் 2015 ஒக்டோபர் 1 ஆம்திகதியிடப்பட்ட 30:1 ஆம்இலக்கதீர்மானத்தைநிறைவேற்றுவதுமற்றும்இலங்கையின்நல்லிணக்கம்மற்றும்மனிதஉரிமைகள்குறித்தவிடயங்கள்தொடர்பிலானஎழுத்துமூலமானஅறிக்கையொன்றினை 2018 மார்ச் 21 ஆம் திகதிஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையிடம்வெ ளிவிவகார அமைச்சர் சமர்ப்பிக்கவுள்ளார்.
மார்ச் 21 ஆம் திகதிநடைபெறவுள்ளபேரவையின் அமர்வில்இலங்கைதூதுக்குழுவானதுவெளிநாட்டலுவல்கள்அமைச்சர்திலக்மாரப்பன தலைமையில் விசேடபணிகளுக்கானஅமைச்சர்சரத்அமுனுகமமற்றும் அமைச்சர்பைசர்முஸ்தபா ஆகியோருடன் கலந்துகொள்கின்றது.
மேலும் இந்த தூதுக்குழுவில் வெளிநாட்ட லுவல்கள் அமைச்சு சட்டமா அதிபர் திணைக்களம், ஒருங்கிணைக்கப்பட்ட நல்லிண க்கப் பொறி முறைக்கான செயலகம் மற்றும் ஜெனிவாவிலுள்ள ஐ.நா.வுக்கான இலங்கையின் நிரந்தர தூதரகம் ஆகியவற்றைச் சேர்ந்த அதிகாரி களும் உள்ளடங்குகின்றனர்.