நால்வரின் உயிரை பலி கொண்ட அனல் தெறிக்கும் விபத்து.
கனடா- பிரம்ரன் பகுதியில் திங்கள் கிழமை இரவு இடம்பெற்ற அனல் தெறிக்கும் மோதலில் நால்வர் கொல்லப்பட்டனர். இது குறித்து பீல் பொலிசார் தீவிர விசாரனை நடாத்துகின்றனர்.
இரவு 8.45 மணியளவில் பிரம்ரனில் போவியாட் டிரைவ் மற்றும் ஹிலிங்ஹாம் டிரைவ் பகுதியில் மெயின் வீதிக்கு மேற்கில் இரண்டு கார்கள் மோதியுள்ளன.
சம்பவ இடத்திற்கு பொலிசார் சென்றடைந்த போது இரு வாகனங்களும் தீயில் எரிந்து மூழ்கிவிட்டிருந்ததாக தெரிவித்துள்ளனர்.
49-வயதுடைய மனிதரால் செலுத்தப்பட்ட 1998 டிரான்ஸ் ஏஎம் தடை ஒன்றை கடந்து 24-வயதுடைய ஜோர்ஜ் ரவுனை சேர்ந்த கியா சோல் என்பவர் செலுத்தி வந்த வாகனத்துடன் மோதியுள்ளது.இந்த வாகனத்தில் பிரம்ரனை சேர்ந்த இவரது 16 மற்றும் 22 வயது மதிக்கத்தக்க சகோதரிகள் இருவர் இருந்துள்ளனர்.மோதிய வேகத்தில் வாகனங்கள் இரண்டும் தீப்பற்றியது.
இரண்டு வாகனத்தில் இருந்தவர்கள் நால்வரும் சம்பவ இடத்திலேயே இறந்து விட்டனர்.
விபத்திற்கு வேகம் காரணமாக இருக்கலாம் என கருதப்படுகின்றது அதே சமயம் சாரதி ஏன் தடையை கடந்தார் என்பது தெளிவாகவில்லை. குறிப்பிட்ட பகுதியில் வேக வரம்பு மணித்தியாலத்திற்கு 70கிலோ மீற்றராகும்.
அருகில் நின்றவர்கள் பாதிக்கப்பட்டவர்களை அணுக முயன்ற போதிலும் கொழுந்து விட்டெரிந்த தீப்பிழம்பு காரணமாக அணுக முடியவில்லை என வீடியோ பதிவுகள் தெரிவிக்கின்றன. பீல் பிராதான மோதல் பணியகம் விசாரனையை மேற்கொண்டுள்ளனர்.
செவ்வாய்கிழமை அதிகாலை எரிந்த வாகனங்கள் அகற்றப்பட்டன.ஆனால் தீயினால் உருகிய வாகனங்களின் பாகங்கள் சாலைவழியில் இன்னமும் காணக்கூடியதாக உள்ளன.