‘இன்போசிஸ்’ நிறுவனத்தின் தலைவர், நாராயண மூர்த்தியின் மாப்பிள்ளை, ரிஷி சுனாக், 36, பிரிட்டன் அமைச்சராக நியமிக்கப்பட்டு உள்ளார்.
பிரபல கம்ப்யூட்டர் மென்பொருள் நிறுவனமான, ‘இன்போசிஸ்’ நிறுவன தலைவரான, நாராயண மூர்த்தியின் மகள், அக் ஷந்தா, ஆக்ஸ்போர்டு பல்கலையில், தன்னுடன் படித்த, ரிஷி சுனாக்கை திருமணம் செய்தார்.
சர்வதேச முதலீட்டு நிறுவனத்தை நடத்தி வந்த ரிஷி, 2014ல், அரசியலுக்குள் நுழைந்தார். இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர்.
கடந்த, 2015ல் நடந்த பார்லிமென்ட் தேர்தலில், நியூயார்க் ஷயர் மாகாணத்தின் ரிச்மாண்டில் இருந்து, எம்.பி.,யாக தேர்வானார்.
பிரிட்டன் பிரதமர், தெரசா மேயின் நம்பிக்கைக்கு உரியவரான ரிஷி சுனாக், வீட்டுவசதி, உள்ளாட்சி துறைகளின் இணை அமைச்சராக நியமிக்கப்பட்டு உள்ளார்.