நாயினால் ஒரு பெண் நீதிமன்றத்தினால் தண்டிக்கப்பட்டுள்ளார். இவர் மீது விலங்கு நலத் தொண்டு நிறுவனமான SPA வழக்குத் தொடர்ந்திருந்தது.
இந்தப் பெண், பிரான்ஸ் Castelnaudary (Aude)யில் 5 டிசம்பர் 2014 இற்கும் 19 ஜுன் 2016 இற்கும் இடையில் மூன்று நாய்களை வீதியில் கைவிட்டுள்ளார். மூன்று சந்தர்ப்பங்களிலும், இந்த நாய்களை ஒரு தூணில் கட்டிவைத்து விட்டு, யாராவது எடுத்துச் செல்லட்டும் எனக் கைவிட்டு விட்டுச் சென்றுள்ளார்.
முறைப்பாட்டைத் தொடர்ந்து, இந்தக் குற்றங்களை ஒப்புக் கொண்ட பெண்ணிற்கு, Carcassonne (Aude) குற்றவியல் நீதிமன்றம், 600 யூரோக்கள் குற்றப்பணம் விதித்துத் தண்டனை வழங்கி உள்ளது.
அத்துடன் ஐந்து வருடங்களிற்கு இவர் எந்தப் பிராணிகளையும் வளர்ப்பதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. SPA நிறுவனத்திற்கு நட்ட ஈடாக 200 யூரோக்கள் வழங்கும்படியும் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.