அரசாங்கத்திற்கு எதிரான போராட்டங்களில் முன்னணியில் இருப்பது 69 லட்சம் வாக்குகளை வழங்கிய மக்கள் என பிவித்துரு ஹெல உறுமய கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
11 கட்சிகள் மற்றும் தொழிற்சங்க தலைவர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
ஒன்றரை வருடங்களாக அமைதியாக வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்து, வேண்டும் என்ற நாட்டை தள்ளி விட்டு உருவாக்கிய பொருளாதார நெருக்கடி இது. எம்மையும் நாட்டையும் அழிக்கவே இந்த அசுரன் உருவாக்கப்பட்டான்.
தாம் உருவாக்கிய அசுரன் தற்போது உருவாக்கியவர்களை விழுங்கி வருகிறான். நாங்கள் துன்பங்களை அனுபவிக்கின்றோம்,அழிந்து வருகின்றோம் என்பது உண்மை.
தாம் உருவாக்கிய பெரிய அசுரன் மக்களையும் நாட்டின் வளங்களை விழுங்கி, மேலும் மேலும் மக்களை சுரண்டி, வளங்களை கொள்ளையிட சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக்கொடுப்பான் என அவர்கள் நினைத்தனர். அவர்கள் உருவாக்கி அசுரன் தற்போது அவர்களையே அழித்து வருகின்றான்.
தற்போது அரசாங்கத்திற்கு ஆதரவளிக்க மக்கள் இல்லை. மக்கள் விரும்பாத அரசாங்கம் தொடர்ந்தும் பதவியில் இருந்து முயற்சிப்பதன் மூலம் நாடு வன்முறை களமாக மாறும்.
மக்கள் கோபம அதிகரிக்கும். நாட்டு மக்கள் சட்டத்தை புறந்தள்ளுவார்கள். ஊரடங்குச் சட்டம், அவசரகாலச் சட்டம் என்பன நடைமுறைப்படுத்தப்பட்டன. மக்கள் உயிர் வாழும் ஆசையை கைவிட்ட பின்னர் எந்த சட்டமும் செல்லுப்படியாகாது.
நாட்டு மக்கள் தாம் விரும்பும் அரசாங்கத்தை ஆட்சிக்கு கொண்டு வர இடமளிக்க வேண்டும் எனவும் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – யூடியூப் YouTube | [email protected]