ஜனநாயகத்தை நோக்கி பயணிக்கும் நாடு என்ற வகையில் இரு நாடுகளினதும் உறவின் ஆரம்பம் பலமானதாக இருக்கட்டும் என பங்களாதேஷ் ஜனாதிபதி மொஹமட் அப்துல் ஹமீது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் தெரிவித்துள்ளார்.
நேற்று (14) மாலை பங்களாதேஷின் ஜனாதிபதியுடன் அந்நாட்டு ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற சந்திப்பின் போது அவர் இதனைக் கூறியுள்ளார்.
தன்னைப் போன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் ஒரு கிராமத்திலிருந்து பதவிக்கு வந்தவராக இருந்து இலங்கை மக்களுக்கு ஆற்றும் பணிகள் தொடர்பில் பங்களாதேஷ் ஜனாதிபதி பாராட்டுக்களையும் கூறியுள்ளார்.