பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக்க சில்வா மீது குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ள ஊழல் எதிர்ப்பு அமைப்பின் தலைவர் நாமல் குமாரவை எதிர்வரும் திங்கட்கிழமை அரச இரசாயனப் பகுப்பாய்வுத் திணைக்களத்துக்கு வருகை தருமாறு அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நாமல் குமார ஊடகங்களுக்கு வெளிப்படுத்தியிருந்த ஊடக காட்சிகள் தொடர்பில் பரிசோதனையை மேற்கொள்வது இவரை அழைத்ததற்கான நோக்கம் என அரச இரசாயனப் பகுப்பாய்வாளர் ஏ. வெலிஅங்க குறிப்பிட்டுள்ளார்.
நாமல் குமார வெளியிட்ட குரல் பதிவில் உள்ளது, அவரினதும் பிரதிப் பொலிஸ் மா அதிபரினதும் குரல் தானா என்பதை உறுதிப்படுத்தல் இதன்போது இடம்பெறவுள்ளது.
குறித்த குரல் பதிவு உள்ளடக்கிய நாமல் குமாரவின் கையடக்கத் தொலைபேசி அண்மையில் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் பொறுப்பேற்கப்பட்டுள்ளது. அந்த தொலைபேசி தற்பொழுது அரச பகுப்பாய்வுத் திணைக்களத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் ஏ. வெலிஅங்க மேலும் கூறியுள்ளார்.