நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச உள்ளிட்ட பிரதிவாதிகள் அறுவருக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு நேற்று ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது எதிர்வரும் 29 ஆம் திகதி வரை வழக்கை ஒத்தி வைப்பதாக உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.
நாமல் ராஜபக்சவுக்ககுச் சொந்தமானது எனக் கூறப்படும் கவர்ஸ் கோப்பரேற் கம்பனி வேறொரு கம்பனியுடன் செய்துக்கொண்ட கொடுக்கல் வாங்கல்களில் தவறான முறையில் 30 மில்லியன் ரூபா பெற்றுக்கொள்ளப்பட்டது.
இது தொடர்பில் நிதிதூய்தாக்கல் சட்டத்துக்கமைய பிரதிவாதிகளுக்கு எதிராக 11 குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.