சத்ரியன்’ திரைப்படத்தை தனது சிகிச்சைக்கு உதவிபுரியும் செவிலியர் சகோதரிகளுடன் பார்த்த போது எடுத்த படம் என புகைப்படம் ஒன்றை விஜயகாந்த் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் அண்மையில் சிகிச்சைக்காக துபாய் சென்றார். அவருடன் இளைய மகன் சண்முக பாண்டியனும் சென்றார்.
இந்நிலையில், இன்று டுவிட்டர் பக்கத்தில் விஜயகாந்த், ‘நான் நல்ல உடல் நலத்துடன் உள்ளேன். நான் நடித்த ‘சத்ரியன்’ திரைப்படத்தை, எனது சிகிச்சைக்கு உதவிபுரியும் செவிலியர் சகோதரிகளுடன் பார்த்த போது எடுத்த படம்’ என புகைப்படம் ஒன்றையும் பதிவிட்டுள்ளார்.