நான் தான் ஜெயலலிதாவின் மகள்! பரபரப்பை கிளப்பும் பெண்
எம்.ஜி.ஆர் ஜெயலலிதாவின் மகள் நான் என ஒரு பெண் செய்தியாளர்களை சந்தித்து கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தின் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அரசியல் வாரிசு தீபா, ஓ.பி.எஸ், சசிகலா என அவர்களுக்குள்ளேயே போட்டி நிலவி வருகிறது.
இந்நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த ப்ரியா மகாலட்சுமி என்னும் பெண், என் தாயார் ஜெயலலிதா. என் தந்தை எம்.ஜி.ஆர் என கூறியுள்ளார்.
மேலும் தான் சசிகலாவால் அதிகம் சோதனைக்கு ஆளாகியதாக அவர் தெரிவித்துள்ளார்.
ஆனாலும், ஜெயலலிதாவுடன் சசிகலா இருப்பதால் தான் ஏதும் செய்யவில்லை என ப்ரியா கூறியுள்ளார்.
ப்ரியாவின் இந்த தகவல் பரபரப்பை ஏற்ப்படுத்தியுள்ளது.