நான் சாமியார் ஆகியிருப்பேன் – சிம்பு சொன்ன அதிர்ச்சி தகவல்
நடிகர் சிம்பு இன்று தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தனியார் தொலைக்காட்சி நடத்திய ஷோவில் கலந்து கொண்டார். இதில் தனது மனதில் பட்டத்தை மிக வெளிப்படையாக பேசினார்.
அவர் படம் இல்லாத நேரத்தில் திருவண்ணாமலை கோவிலில் இருக்கும் ஒரு சாமியாரிடம், மன நிம்மதி வேண்டும், சில நேரங்களில் ரொம்ப கஷ்டமாக இருக்கிறது, சினிமாவை விட்ரலாமா , இங்கேயே சாமியாராக ஆகிடலாமா என்று போல் தோன்றுகிறது என்று தனது மன குமுறலை சாமியாரிடம் கூறியுள்ளார்.
அதற்கு அவர் நான் இங்கு சாமியாராக இருக்கிறேன் என்றால் நான் செய்ய வேண்டிய கர்மா உள்ளது, அது போல் உனக்கும் இந்த பூலோகத்தில் செய்ய வேண்டிய வேலை இருக்கிறது, அது உன் கர்மா வை நோக்கி பயணிக்கும் ஆதலால் முடிந்த வரை இயலாதவருக்கு உதவி செய், நல்லதே யோசி என்றார் .