அவர்கள், நான் என் தாயைக் கொலை செய்ய வேண்டும்; இல்லையேல் என்னைக் கொன்றுவிடுவேன் என்று அச்சுறுத்தினார்கள் என தெற்கு சூடானின் ஆயுத குழுவிலிருந்து மீட்கப்பட்ட சிறுவன் ஒருவர் கூறியிருக்கிறார்.
கடந்த ஐந்து வருடங்களாக தெற்கு சூடானில் உள்நாட்டுப் போர் நடந்து வருகிறது. இதில் 19,000க்கு மேற்பட்ட குழந்தைகள் கிளர்ச்சியாளர்களுக்கும், ராணுவத்திற்கும் ஆயுதம் தாங்கிய வீரர்களாக பணிபுரிந்திருக்கிறார்கள்.
இந்த நிலையில் புதன்கிழமை சுமார் 300 சிறுவர்கள் ஆயுதம் தாங்கிய குழுக்களிடமிருந்து மீட்கப்பட்டுள்ளனர். இவர்களில் 87 பேர் சிறுமிகள்.
இது குறித்து ஐ. நா., தரப்பில், “சுமார் 224 சிறுவர்களும், 87 சிறுமிகளும் ஆயுதங்களைத் துறந்துள்ளனர். இன்னும் வரும் வாரங்களில் சுமார் 700 பேர் விடுவிக்கப்படுகின்றனர். இதுவரை 2,000 சிறுவர் சிறுமிகளை ஐ. நா., விடுவித்துள்ளது. அவர்களில் 10 % பேர் 13 வயதுக்குட்பட்டவர்கள்” என்று கூறியுள்ளது.
ஆயுதப் படையிலிருந்து மீட்கப்பட்ட சிறுவன் ஒருவன் கூறும்போது, “அவர்கள் என் தாயை கொல்லும்படி கூறினார்கள். எனது 10 வயதில் நான் ஆயுதப் படையில் வீரனாக சேர்க்கப்பட்டேன்.
எனது அம்மா எனது தளபதியிடம் என்னை விடுவுக்குமாறு கூறினார். ஆனால் அவர்கள் என்னை என் தாயை கொல்லும்படி கூறினார்கள். இல்லையேல் அதற்கு பதிலாக நான் கொல்லப்படுவேன் என்று மிரட்டினார்கள். எனக்கு வேறு வழியில்லை. நான் கடவுளிடம் என்னை மன்னித்து கொள்ள வேண்டினேன். ஆனால் என் அம்மா அங்கிருந்து தப்பித்துவிட்டர். தற்போது என் குடும்பம் என்னை மன்னித்து விட்டது” என்றார்.