கோவிட் பெருந்தொற்று பரவுகை நிலைமை காரணமாக நாடு ஒருபோதும் முடக்கப்படாது என அறிவிக்கப்படுகின்றது.
ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச தலைமையில் நேற்றிரவு நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
நாடு முடக்கப்படாது என்ற போதிலும் கடுமையான பயணக்கட்டுப்பாடுகள் அமுல்படுத்தப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டை முடக்கினால் பொருளாதாரத்தை முன்னெடுத்துச் செல்ல முடியாத நிலைமை உருவாகும் என அவர் தெரிவித்துள்ளார்.
அன்றாடம் தொழில்களில் ஈடுபடும் நபர்கள் முடக்கம் அறிவிக்கப்பட்டால் பாரிய பிரச்சினைகளை எதிர்நோக்குவர் என தெரிவித்துள்ளார்.
கோவிட் பெருந்தொற்றை கட்டுப்படுத்துவதற்கு துரித கதியில் தடுப்பூசி ஏற்றுகையை மேற்கொள்ள வேண்டும் எனவும் அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டுமெனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார் என தெற்கு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.