தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல் படுத்திய சில தினங்களிலேயே கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை ஒரே தடவையாக குறைவடையவில்லை என யாரும் சங்கடப்படவோ மனதளவில் பாதிக்கப்படவோ தேவையில்லை.
நாட்டை முடக்கியதன் பிரதிபலனை கண்டுகொள்வதற்கு குறைந்த பட்சம் இரண்டுவாரங்களாவது செல்லும் என ராகம வைத்திய பீடத்தின் சிரேஷ்ட பேராசிரியர் அர்ஜுனத சில்வா தெரிவித்தார்.
அத்துடன் காெவிட் தடுப்பூசியை தெரிவுசெய்துகொண்டிருக்காமல் முதலில் கிடைக்கும் தடுப்பூசி சிறந்த தடுப்பூசி என நினைத்து பெற்றுக்கொள்ளவேண்டும் எனவும் தெரிவித்தார்.
கொவிட்டை கட்டுப்படுத்தும் நோக்கில் நாடு முடக்கப்பட்டுள்ளபோதும் கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை குறைவடையவில்லை என பலரும் தெரிவித்து வரும் கருத்து தொடர்பில் குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.