“இடைக்கால அரசு ஒன்றே அமைக்கப்பட்டுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியால் செய்ய முடியாமல் போன நாட்டைக் காப்பாற்றவே ஜனாதிபதி எங்களிடம் ஆட்சியை ஒப்படைத்தார். பொறுமையாக இருந்தால் நாங்கள் மூன்றிலிரண்டு பெரும்பான்மையுடன் ஆட்சியைக் கைப்பற்றி இருக்கலாம். அவசரப்பட்டுவிட்டோம் என்று சிலர் கூறுகின்றனர். நாங்கள் அவசரப்படவில்லை. நாட்டைக் காப்பாற்ற தாமதிக்காமல் முடிவெடுத்தோம். பதவி எங்களுக்கு முக்கியம் அல்ல. போர்க் காலத்தில் வழங்கியது போன்று எனக்கு இப்போதும் ஒத்துழைப்பு வழங்குமாறு அனைத்துத் தரப்பினரிடமும் கேட்டுக்கொள்கின்றேன்.”
– இவ்வாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நேற்று வெளியிட்டுள் விசேட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
ஆங்கிலத்தில் வெளிவந்த அவரின் அறிக்கை இந்தச் செய்தியுடன் இணைக்கப்பட்டுள்ளது.