புதிய அரசியலமைப்பை ஆதரிப்பவர்கள் நாட்டுக்கு துரோகம் செய்பவர்கள், அவர்கள் கொல்லப்பட வேண்டியவர்கள் என்று கமல் குணரத்ன வலியுறுத்தியுள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது, புதிய அரசியலமைப்பு உருவாக்க முயற்சிகள் மற்றும் அரசாங்கத்தின் நல்லிணக்க செயற்பாடுகளை கடுமையாக விமர்சித்துள்ளார்.
புதிய அரசியலமைப்பு உருவாக்கம் நாட்டுக்குச் செய்யும் துரோகம் என்றும், நாட்டுக்குத் துரோகம் செய்யும் நபர்கள் சுட்டுக் கொலை செய்யப்பட வேண்டும் என்றும் அவர் கடுமையான குரலில் வலியுறுத்தியுள்ளார்.