1959 ஆம் ஆண்டிலிருந்து 1975 ஆம் ஆண்டு வரை நாட்டில் மரண தண்டனை நடைமுறையில் இருந்து வந்துள்ளது என்றாலும் 1976 ஆம் ஆண்டிலிருந்து நாட்டில் மரண தண்டனை நடைமுறைப்படுத்தப்படவில்லை என நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (18) வாய்மூல விடைக்கான விடைக்கான கேள்வி நேரத்தில் வேளையில் புத்திக பத்திரன எம்பி எழுப்பிய கேள்வியொன்றுக்குப் பதிலளிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்.
அது தொடர்பில் அமைச்சர் மேலும் தெரிவிக்கையில்,
1959 ஆம் ஆண்டிலிருந்து 1975 ஆம் ஆண்டு வரையிலான காலத்தில் கண்டி போகம்பரை சிறைச்சாலையில் 31 நபர்களுக்கு தூக்குத்தண்டனை வழங்கப்பட்டுள்ளதுடன் அது சம்பந்தப்பட்ட ஆவணங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தும்பர சிறைச்சாலை அதிகாரியினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்படுகிறது.
சிறைச்சாலை தகவல்களின்படி 1969 ஆம் ஆண்டு முதல் 1976 ஆம் ஆண்டு வரை 42 பேர் மரணதண்டனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
அந்த வகையில் 1976 ஆம் ஆண்டுக்குப் பின்னர் நாட்டில் மரண தண்டனை நடைமுறைப்படுத்தப்படவில்லை. அதன்படி மரண சான்றிதழ்கள் சாதாரண நடைமுறையின் கீழேயே வழங்கப்பட்டுள்ளன.
மரண தண்டனை விதிக்கப்படாததால் நாட்டில் 46 வருட காலங்கள் எவரும் மரண சான்றிதழ் தொடர்பான பரிசோதனை தொடர்பில் விண்ணப்பங்களை முன்வைக்கவில்லை.
மரண தண்டனை நடைமுறைப்படுத்தும் போது அது மருத்துவர் ஒருவரின் முன்னிலையிலேயே இடம் பெறுகிறது. அந்த வகையில் மரண தண்டனை வழங்கப்பட்டு அவர் மரணமடைந்தார் என்ற அறிக்கையை சம்பந்தப்பட்ட மருத்துவர் வழங்கும்போது அதன் மூலமே மரண சான்றிதழ் தயாரிக்கப்படுகிறது என்றார்.