நாட்டில் நேற்று 19.06.2021 கொரோனா தொற்றுக் காரணமாக மேலும் 47 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அந்த வகையில் நாட்டில் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 2,581 ஆக உயர்வடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டில் கடந்த 3 வாரங்களாக நடைமுறைப்படுத்தப்பட்டிருந்த போக்குவரத்து கட்டுப்பாடுகள் நாளையுடன் தளர்த்தப்பட்டுள்ளன. எனினும் தளர்வுகளின் பின்னர் கடைபிடிக்க வேண்டிய சுகாதார விதிமுறைகள் தொடர்பில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் ஏற்கனவே வெளியிடப்பட்ட ஆலோசனை வழிகாட்டல்கள் புதுப்பிக்கப்பட்டு மீண்டும் வெளியிடப்பட்டுள்ளன.
இதே வேளை இன்று ஞாயிறுக்கிழமை 47 கொவிட் மரணங்கள் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் உறுதிப்படுத்தப்பட்டன. சனியன்றும் இவ்வாறு 54 மரணங்கள் அறிவிக்கப்பட்டன. அதற்கமைய இரு தினங்களில் 101 கொவிட் மரணங்கள் பதிவாகியுள்ளன.
புதிய சுகாதார ஆலோசனை வழிகாட்டல்கள்
வீடுகளிலிருந்து அத்தியாவசிய சேவை நிமித்தம் இருவர் மாத்திரமே வெளிச்செல்ல முடியும். முச்சக்கரவண்டிகள் உள்ளிட்டவை செல்ல அனுமதி வழங்ப்பட்டுள்ளதோடு , அவற்றில் இருவர் மாத்திரமே பயணிக்க முடியும்.
மாவட்டங்களின் பதிவாகும் தொற்றாளர்களின் எண்ணிக்கைக்கு அமைய மாவட்டங்களுக்கு இடையிலான போக்குவரத்து கட்டுப்பாடுகள் நீடிக்கப்படலாம் அல்லது தளர்த்தப்படலாம். அத்தோடு சகல சந்தர்ப்பங்களிலும் அடிப்படை சுகாதார விதிமுறைகள் தொடர்ந்தும் பேணப்பட வேண்டும். மாகாணங்களுக்கிடையிலான போக்குவரத்து கட்டுப்பாடுகள் நடைமுறையிலிருக்கும்.
தனிமைப்படுத்தல்
நாளை திங்கட்கிழமை அதிகாலை 04 மணி முதல் 12 மாவட்டங்களில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள 82 கிராம சேவகர் பிரிவுகள் விடுவிக்கப்படவுள்ளன. இதேவேளை, தெமட்டகொடை – ஆராமய ஒழுங்கையின் 66 ஆவது தோட்டம் உள்ளிட்ட 12 மாவட்டங்களிலுள்ள 24 கிராம சேவகர் பிரிவுகள் நாளை அதிகாலை 04 மணி முதல் தனிமைப்படுத்தப்படவுள்ளன.
இன்று இனங்காணப்பட்ட தொற்றாளர்கள்
இதே வேளை நேற்று ஞாயிறுக்கிழமை மாலை 6 மணி வரை 1553 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர். அதற்கமைய இதுவரையில் நாட்டில் 239 214 பேருக்கு கொவிட் தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் 201 389 தொற்றாளர்கள் குணமடைந்துள்ளதோடு 35 291 தொற்றாளர்கள் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இரு தினங்களில் 101 கொவிட் மரண்கள்
இதே வேளை இன்று ஞாயிற்றுக்கிழமை மேலும் 47 கொவிட் மரணங்கள் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் உறுதிப்படுத்தப்பட்டன. அதற்கமைய நாட்டில் கொவிட் தொற்றினால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2581 ஆக உயர்வடைந்துள்ளது. மேலும் நேற்று சனிக்கிழமை மேலும் 54 கொவிட் மரணங்களும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் உறுதிப்படுத்தப்பட்டன. அதற்கமைய இரு தினங்களில் 101 மரணங்கள் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.