நாட்டில் ஒமிக்ரோன் தொற்றாளர்களின் எண்ணிக்கை ஐந்தாக அதிகரித்துள்ளது.
இன்றைய தினம் மேலும் 4 ஒமிக்ரோன் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக ஸ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் நோய் எதிர்ப்பு மற்றும் ஒவ்வாமை பிரிவின் பணிப்பாளர் கலாநிதி சந்திம ஜீவந்தர தெரிவித்தார்.
ஸ்ரீயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஆய்வு கூடத்தில் சந்தேகத்திற்கிடமான மாதிரிகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் இப்புதிய தரவு கிடைக்கப் பெற்றதாகவும் , இந்த மாதிரிகள் பெற்றுக் கொள்ளப்பட்ட நபர்கள் தொடர்பான தகவல்கள் பின்னர் அறிவிக்கப்படும் என்றும் கலாநிதி சந்திம ஜீவந்தர தெரிவித்தார்.
தென்னாபிரிக்காவில் நவம்பர் இறுதி வாரத்தில் அடையாளங்காணப்பட்ட அபாயம் மிக்க ‘ஒமிக்ரோன்’ வைரஸ் பிறழ்வு கடந்த இரண்டாம் திகதி முதன்முறையாக இலங்கையில் அடையாளம் காணப்பட்டது.
நைஜீரியாவிலிருந்து வருகை தந்த பெண்ணொருவரின் மாதிரிலேயே இவ்வாறு முதன்முறையாக ஒமிக்ரோன் தொற்று இனங்காணப்பட்டது.
‘ஒமிக்ரோன்’ தொற்றுடன் இனங்காணப்பட்ட பெண் , நவம்பர் 24 ஆம் திகதி நாட்டுக்கு வருகை தந்த போது , பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் முன்னெடுக்கப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையில் தொற்றுறுதி செய்யப்பட்ட நிலையில் அவரது மாதிரி ஆய்வுகூட பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட போது ஒமிக்ரோன் தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறான நிலையில் இலங்கையில் மேலும் 4 ஒமிக்ரோன் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – YouTube | [email protected]