மேல், மத்திய, சப்ரகமுவ, வடமேல் மற்றும் தென் மாகாணங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது.
இதேவேளை, களனி, களுகங்கை, ஜின் கங்கை மற்றும் நில்வள கங்கை ஆகியவற்றின் நீர் மட்டம் உயர்வடைந்துள்ளதாகவும் தாழ்வான பிரதேசங்களில் சிறியளவான வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் உள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதனால் மேற்குறிப்பிட்ட நதிகளை அண்டிய பகுதிகளிலுள்ள தாழ்வான பிரதேசங்களில் சிறியளவான வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் உள்ளதென நீர்ப்பாசன திணைக்களம் மேலும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.
வடக்கு மாகாணத்தில் பல இடங்களில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளில் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 60 கிலோமீற்றர் வரை அதிகரித்த வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடிய சாத்தியம் காணப்படுகிறது.
வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல்மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் மேற்கு கரையோரப் பிரதேசங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50 கிலோ மீற்றர் வரை அதிகரித்த வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, காற்றின் வேகம் மணிக்கு 60 முதல் 70 கிலோ மீற்றர் வரை காங்கேசன்துறை முதல் பொத்துவில் ஊடாக மன்னார், புத்தளம், கொழும்பு, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை வரையான கடற்பகுதிகளில் அதிகரித்துக் காணப்படும்.
காற்றின் வேகம் அதிகரித்துக் காணப்படும் வேளையில் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவேண்டாமென அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.