நாட்டில் நேற்றைய தினத்தில் மாத்திரம் 337,445 பேருக்கு கொவிட் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.
அதனடிப்படையில் ஒரு நாளில் செலுத்தப்பட்ட அதிகளவான தடுப்பூசிகள் இதுவாகும் என அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை நாட்டில் இதுவரை 4,523,770 பேருக்கு கொவிட் தடுப்பூசியின் முதலாவது டோஸ் போடப்பட்டுள்ளதாக தொற்று நோயியல் பிரிவு குறிப்பிட்டுள்ளது.
சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு அறிக்கை ஒன்றை வௌியிட்டு இதனை குறிப்பிட்டுள்ளது.
இதற்கமைய, நேற்றைய தினத்தில் (13) மாத்திரம் 289,122 பேருக்கு சீனாவின் சைனோபார்ம் (sinopharm) தடுப்பூசியின் முதலாவது டோஸ் போடப்பட்டுள்ளது.
மேலும், சைனோபார்ம் தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் நேற்று 32,385 பேருக்கு போடப்பட்டுள்ளதாக தொற்று நோயியல் பிரிவு குறிப்பிட்டுள்ளது.