நாட்டில் தேங்காய் பற்றாக்குறை ஏற்படுவதற்கு பிரதான காரணம் மஹிந்த ராஜபக்ஷவுடன் உள்ள குழுவே ஆகும் என அமைச்சர் பி. ஹரிசன் தெரிவித்தார்.
இன்று தேர்தல் மேடைகளில் மஹிந்த ராஜபக்ஷ குழுவினர் மக்களிடம் தேங்காயின் விலை அதிகமாகவுள்ளதாக கூறி அரசாங்கத்துக்கு எதிரான சிந்தனையை வளர்க்கின்றனர்.
கடந்த காலத்தில் மத ஸ்தானங்கள் அனைத்துக்கும் சென்று ஒவ்வொரு மஹிந்த குழு உறுப்பினரும் அதிகமான தேங்காய்களை வேண்டுதலுக்காக உடைக்கப் போய்த் தான் நாட்டில் தேங்காய் தட்டுப்பாடு ஏற்பாட்டது என்பதை அவர்கள் மறந்து விட்டார்கள். இன்று இதனை இவர்கள் அரசாங்கத்தின் மீது போடுகின்றார்கள் எனவும் அமைச்சர் நேற்று(25) ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையில் மேலும் குறிப்பிட்டார்.