நாடளாவிய ரீதியில் பல பிரதேசங்களில் நிலவிய குளிர் காலநிலை படிப்படியாக குறைந்து வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மாண்டவுஸ் சூறாவளியும் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக திணைக்களத்தின் முன்னறிவிப்பு திணைக்களத்தின் பணிப்பாளர் ஷிரோமணி ஜயவர்தன தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இன்று (டிச. 11) காலை 8 மணியளவில் கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தினால் வெளியிடப்பட்ட அறிக்கையில், நாட்டில் காற்றின் தரம் வழமைக்கு திரும்பியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அமெரிக்க காற்றின் தரக் குறியீட்டின்படி, நாட்டின் பல பகுதிகளில் காற்றின் தரம் 100 முதல் 150 வரை உள்ளது.
எவ்வாறாயினும், வடக்கு, வடமத்திய, வடமேற்கு மற்றும் மேல் மாகாணங்களின் நகர்ப் புறங்களின் வானிலை தன்மையை பொறுத்து, இந்த மதிப்புகள் மாறக்கூடும் என்று கட்டட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.