எரிபொருள் இறக்குமதிக்கு தேவையான டொலர் விடுவிக்கப்படும். எரிபொருளுக்கு தட்டுப்பாடு ஏற்படாது. தற்போது கையிருப்பில் உள்ள டொலர் 2 பில்லியனால் குறைவடைந்துள்ளதாக மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,
எரிபொருள் இறக்குமதி செய்வதற்கு நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது என்றும், இதனால் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் என்று குறிப்பிடும் கருத்துக்கள் முற்றிலும் அடிப்படையற்றவை. எரிபொருள் தட்டுப்பாடு ஒருபோதும் ஏற்படாது.
எரிபொருள் இறக்குமதிக்கு தேவையான டொலரை பெற்றுக்கொள்வதற்காக இந்தியாவிடம் 500 மில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவி கோரப்பட்டுள்ளது.
அத்துடன் கட்டார் உள்ளிட்ட நாடுகளிடம் எரிபொருள் நிவாரண அடிப்படையில் பெற்றுக்கொள்ள பேச்சுவார்த்தைகள் முன்னெக்கப்படுக்கப்பட்டுள்ளன. கோரப்பட்டுள்ள உதவிகள் கிடைக்கப் பெறாவிடின் பாரிய நெருக்கடி ஏற்படும்.
தற்போது டொலர் கையிருப்பு 2 பில்லியன் வரை குறைவடைந்துள்ளது. எரிபொருள் இறக்குமதிக்காக எதிர்பார்க்கப்படும் அளவிலான டொலரை விடுவித்தால் ஏதேனும் பாதிப்புக்கள் ஏற்படுமா என்பது குறித்து பொருளாதார நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர் என்றார்.
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – YouTube | [email protected]