நாட்டில் இனரீதியான பாடசாலைகள் காணப்படுகின்றமைதான் மக்களிடையிலான ஒற்றுமையின்மைக்கு காரணம் என மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சிமன்ற அமைச்சர் பைஸர் முஸ்தபா தெரிவித்துள்ளார்.
மல்வத்து மஹாநாயக தேரருடன் நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அங்கு மேலும் தெரிவித்த அவர், “ சிங்களம், தமிழ், முஸ்லிம் என ஒவ்வொரு இனத்தவருக்கும் வெவ்வேறாகக் காணப்படும் பாடசாலைகளை அகற்றி அனைத்தையும் ஒரே பாடசாலைக்குள் கொண்டுவர வேண்டும்.
ஆரம்பத்தில் இனரீதியில் பாடசாலைகள் பிரிக்கப்பட்டு காணப்படவில்லை. இதனால் மக்களிடத்திலும் ஒற்றுமை காணப்பட்டது. ஆனால் தற்போது பாடசாலைகள் இனரீதியாக பிரிக்கப்பட்டு ஒற்றுமையின்மைக்கு வித்திட்டுள்ளது.
மேலும், தீவிரவாத அமைப்புகள் உலகிலுள்ள முஸ்லிம்களை ஒன்று திரட்டி அவர்களின் மனதில் பயங்கரவாதத்தை தோற்றுவிக்க முயன்ற போதிலும் எம்நாட்டு முஸ்லிம் மக்கள் அதற்கு ஒருபோதும் இடம்கொடுக்கவில்லை” எனவும் அவர் தெரிவித்தார்.