நாட்டில் நேற்றைய தினம் 2,436 பேருக்கு கொவிட்-19 தொற்று உறுதியாகியுள்ளது.
அவர்களில் வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பிய 17 பேரும் அடங்குவதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
இதற்கமைய நாட்டில் கொவிட்- 19 தொற்று உறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 230,692 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை நேற்று (16) கொவிட்-19 தொற்றிலிருந்து மேலும் 1,667 பேர் குணமடைந்தனர்.
தொற்றுநோயியல் பிரிவு விடுத்துள்ள நாளாந்த அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய நாட்டில் கொவிட்-19 தொற்றிலிருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 194,145 ஆக அதிகரித்துள்ளது.
இந்நிலையில் தொற்று உறுதியான 34,232 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.